பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 16 December 2012

விண்ணப்பம்…!



தொடக்கப்பள்ளி மாணவனின்,
தலையாய வணக்கம்.


என் தோட்டத்து மரங்களில்,
வேர்கள், விழுதுகளை
வியப்பு மேலிடப் பார்க்கின்றன.


எனக்கான வகுப்பறையில்
செயல்வழிக் கற்றலில்…
என்
சிந்தனைச் சிறகுகள்
சுதந்திரமாய் நீள்கின்றன.


கணினித் திரையில்
உயிரெழுத்து ஓவியங்களை,
உரக்கப் படிக்கிறேன்.


பச்சை மரங்களின் தாலாட்டும்
பசியிடையூறு நீங்கச் சத்துணவும்
பள்ளியின் வாசல்வரும் பேருந்தும்
புதுச்சீருடையும் புத்தகமில்லாப் பையுமாய்….



அரசின் சுட்டுவிரல்பிடித்து நடக்கும்
அழகுப் பிள்ளையாய்..
நிமிர்ந்து நடக்கிறேன்.


கற்றலுக்கும் கற்பித்தலுக்குமான
இடைவெளிகளற்ற
அன்புப்பள்ளியின் அறிவுமாணவனாய்…
வலம் வருகிறேன்.


என்
இதயத்துடிப்பின் மகிழ்வுத்துள்ளலை
மனமுழுக்க நிறைத்திருக்கிறேன்.


வாருங்கள்  !
சுகமான கற்றலைச்
சுவாசிக்கலாம்.


சூழ்நிலைக் கற்றலைச்
சாத்தியமாக்கலாம்  !


பஞ்சாயத்துஒன்றியத் தொடக்கப்பள்ளியின்
பசுமைச் சுவர்களில் ..
பாரதத்தின் பெருமைகளைப்
பெருமிதமாய் வரையலாம்.


பயப்படாமல் வாருங்கள்..
வகுப்பறை மையத்திலிருந்த
ஆசிரியரின் நாற்காலி
முன்வரிசை மாணவர்களில்
ஒருவராய் மாறிவிட்டது.


No comments:

Post a Comment